தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதைக் காணொலி வாயிலாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

குடியரசுத்தலைவர்
குடியரசுத்தலைவர்

By

Published : Sep 5, 2021, 2:03 PM IST

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில், அவரை கௌரவிக்கும் வகையில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

அந்த வகையில், இந்தாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொலி மூலம் வழங்கினார்.

44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்பட பல அரசு உயர் அலுவலர்கள் காணொலி மூலம் கலந்துகொண்டனர்.

எதிர்காலம் ஆசிரியர்களின் கையில்

நிகழ்ச்சியில் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், " இந்த நன்னாளில் அனைத்து ஆசிரியர்களையும் வாழ்த்துகிறேன். வருங்கால தலைமுறையின் எதிர்காலம் நல்ல ஆசிரியர்களின் கையில் பாதுகாப்பாக உள்ளது.

உலகம் முழுவதும் தத்துவஞானியாகவும் அறிஞராகவும் அறியப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு ஆசிரியராக மட்டுமே நினைவில் இருக்க விரும்பினார். அவர் ஒரு சிறந்த ஆசிரியராக அழியாத முத்திரையை பதித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2 ஆசிரியர்கள்

திருச்சி பிராட்டியூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவிக்கும், ஈரோடு மொடக்குறிச்சி அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை லலிதாவுக்கும் தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற்றனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணாக இந்தாண்டும் காணொலி வாயிலாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த முறை, 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உலக தலைவர்களை மிஞ்சிய மோடி... மக்கள் ஆதரவில் டாப்!

ABOUT THE AUTHOR

...view details