தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடுகு எண்ணெய் விளம்பர பேனரில் குடியரசுத் தலைவர் படம்; போலீஸில் புகார்! - latest tamil news

ஒடிசாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புகைப்படத்தை விளமபர பேனரில் பயன்படுத்திய தனியார் கடுகு எண்ணெய் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடுகு எண்ணெய் விளம்பர பேனரில் குடியரசு தலைவர் படம்
கடுகு எண்ணெய் விளம்பர பேனரில் குடியரசு தலைவர் படம்

By

Published : Dec 9, 2022, 11:00 PM IST

ராய்ரங்பூர்:ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் கராஞ்சியா பகுதியில் ராணி எனும் தனியார் கடுகு எண்ணெய் நிறுவனம் தனது விளம்பர பேனர்களில் குடியரசு தலைவரான திரௌபதி முர்முவின் புகைப்படத்தை பயன்படுத்தி, அதனை பொதுவெளியில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, குடியரசு தலைவரை அவமதித்ததாக நிறுவனத்தின் விநியோகஸ்தர் மற்றும் நிறுவன உரிமையாளர் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்திய குடியரசு தலைவரான திரௌபதி முர்முவின் சொந்த மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இமாச்சல் முதலமைச்சராக பிரதீபா சிங் தேர்வு ?.. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details