தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புத்தாண்டு விடியல் புதிய ஆற்றலுடன் சாதனைகளையும் கொண்டுவரட்டும் - குடியரசுத் தலைவர் - திரௌபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர்

By

Published : Jan 1, 2023, 8:57 AM IST

டெல்லி:உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் வெகுசிறப்பாக கொண்டாப்பட்டுவருகிறது. அரசியல் தலைவர்களும் பிரபலங்களும், தொழிலதிபர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், "புத்தாண்டு தினத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த மற்றும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு விடியல், புதிய ஆற்றலுடன், புதிய மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டுவரட்டும். இந்தத் தருணத்தில், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். 2023ஆம் ஆண்டில் நமது புகழ்பெற்ற தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:WEEKLY HOROSCOPE... ஜனவரியின் முதல் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..?

ABOUT THE AUTHOR

...view details