தேஜ்பூர் :இந்திய விமானப் படையின் சுகாய் எம்கேஐ ரக போர் விமானத்தில் பறந்து சாகசம் மேற்கொண்ட புகைப்படங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டு உள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் இந்திய விமான படை தளத்தில் இருந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாகசம் மேற்கொண்டார்.
முன்னதாக அதிகாலை இந்திய விமானப் படையின் தளத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு விமான படை வீரர்கள் சிறப்பு மரியாதை வழங்கினர். ராணுவ வீர்ரகளின் அணிவகுப்பு மரியாதையை திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். தொடந்து விமானப் படையினர் சுகாய் 30 எம்கேஐ ரக போர் விமானத்தில் தனது முதல் சாகசத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மேற்கொண்டார்.
இதையும் படிங்க :Vande Bharat: சென்னை - கோவை வந்தே பாரத்.. டிக்கெட் விலை நிலவரம், மக்களின் கோரிக்கைகள் என்ன?
இந்த சாகசத்தின் போது குடியரசுத் தலைவருடன், இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். போர் விமானத்தில் பயணிப்பதற்கு முன் எடுத்த புகைப்படங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சுகாய் எம்கேஐ போர் விமானத்தின் விமானி, குடியரசுத் தலைவருடன் உடன் உள்ளார்.
அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா கூறி வரும் நிலையில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சுகாய் 30 ரக போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் சாகசம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அண்மையில் அருணாசல பிரதேசத்தின் 12 இடங்களுக்கு 3வது கட்ட மறுபெயர்களை சீனா வெளியிட்டது.
இந்தியாவின் அங்கமான அருணாசல பிரதேசத்தை, தெற்கு திபெத் என சீனா கூறி வருகிறது. அசாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று (ஏப். 7) காசிரங்கா தேசிய பூங்விம் கஜ் உற்சவம் 2023 விழா மற்றும் அசாம் மலையேறும் சங்கம் ஏற்பாடு செய்த கஞ்சன்ஜங்கா மலைப் பயணம் - 2023 கவுகாத்தியில் தொடங்கி வைத்தார்.
முன்னதாக எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள இந்திய விமானப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்துகளை தெரிவித்தார். இதனிடையே கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் 75 ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நிதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க :செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் ரயில் துவக்கம் - பிரதமர் விழாவை கேசிஆர் புறக்கணிப்பா?