டெல்லி: 73ஆவது குடியரசு தின விழா நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது மெய்க்காப்பாளர்களின் பாதுகாப்புடன் ராஷ்டிரபதி பவன் திரும்பினார்.
இந்நிகழ்வை சிறப்பாக்கியது, விராட் என்னும் பெயரிடப்பட்ட குடியரசுத்தலைவரின் மெய்க்காப்பாளருடைய குதிரையின் ஓய்வு குறித்து அறிவிப்பு தான்.
விராட், 19 ஆண்டுகள் பணியில், 13 குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற்றுள்ளது. இந்நிலையில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் இன்று (ஜனவரி 26) ஓய்வு பெற்றது.
விராட், குடியரசுத்தலைவரின் மெய்க்காப்பாளர் கர்னல் அனுப் திவாரியின் குதிரையாகும்.
ஜனவரி 15ஆம் தேதியன்று, விராட்டுக்கு ராணுவப் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. சேவை மற்றும் திறனுக்காக இவ்விருதினை பெற்ற முதல் குதிரை விராட் தான்.
விராட் ஓய்வு பெறும் நிகழ்வில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:உத்தரப்பிரதேச பரப்புரையில் புதிய உத்தி: மோடி, ஆதித்தியநாத் யோகி உருவப்படம் அச்சடிக்கப்பட்ட சேலைகள்!