டெல்லி: வட இந்தியா மாநிலங்களில் இன்று (ஆகஸ்ட் 11) ரகசா பந்தன் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரக்ஷா பந்தன் பண்டிகையானது சகோதரிக்கும், சகோதரருக்கும் இடையே உள்ள பிணைப்பை கொண்டாடுகிறது. இந்நாளில் சகோதரிகள் அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி கயிறை கட்டி, இனிப்பு வழங்குவார்கள். சகோதரர் இதற்கு பரிசு பொருட்களை வழங்க வேண்டும்.
இது குறித்து குடியரசு தலைவர் முர்மு அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத பந்தம், பாசம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமான ரக்ஷா பந்தனின் மகிழ்ச்சியான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா மூலம் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதோடு பெண்களுக்கான மரியாதையை அதிகரிக்கவும் விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.