தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’பெருந்தொற்றை எதிர்கொள்ள தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்தது’ - அமைச்சர் ஹர்ஷ் வர்தன் - இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Harsh Vardhan
Harsh Vardhan

By

Published : May 20, 2021, 3:59 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பு சார்பில் நடைபெற்ற மெய்நிகர் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: கோவிட்-19 பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இதுபோன்ற இக்கட்டான சூழலில் சர்வதேச ஒருங்கிணைப்பின் தேவை அவசியமாகியுள்ளது. சர்வதேச நாடுகள் தங்கள் வளங்களை ஒன்றிணைத்து தேவைகேற்ப அவற்றை பயன்படுத்தும் திட்டத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தொழில்நுட்பம் இந்தியாவில் முக்கியப் பங்களிப்பை செய்கிறது. தொற்றைக் கண்காணிக்க, மருத்துவப் பொருள்களை விநியோகம் செய்ய, கள விவரங்களை தொகுத்து ஆராய கோவிட் இந்தியா இணையதளம், ஐசிஎம்ஆர் இணையதளம், ’ஆரோக்கிய சேது’ செயலி போன்ற பல தொழில்நுட்ப வசதிகளை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் சீராக மேற்கொள்ள கோ-வின் என்ற ஒருங்கிணைந்த தளத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:கேரள முதலமைச்சரை பாராட்டிய மோடி; மாநிலங்கள் தடுப்பூசி வீணாவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details