நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவரும் நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இன்று ஒட்டுமொத்த தேசமே கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து போராடிவருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த அனைத்து குடிமக்களுக்கும் சோதனையாக மாறியுள்ள சூழலில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டிய தருணம் இது.
பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், படுக்கைகள், அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழலை உணர்ந்து மக்கள் அனைத்து முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ள வேண்டும். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்.