சாமராஜ்நகர் (கர்நாடகா):கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தோட்வானி மலைக்கிராமம். இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சாந்தலாவுக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால், அக்கிராமத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் 8 கி.மீ., தொலைவில் உள்ள சுல்வாடி மருத்துவமனைக்கு 'டோலி' கட்டி தூக்கிச்செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து நள்ளிரவு 1 மணியளவில் புலிகள், சிறுத்தைகள், யானைகள் அச்சுறுத்தல் உள்ள காட்டுப்பாதையில் தூக்கிச் சென்றனர். காலை 6 மணியளவில் மருத்துவமனையை அடைந்த நிலையில், அங்கு மருத்துவர்கள் சாந்தலாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு, எந்தச் சிக்கலும் இல்லாமல் குழந்தை பிறந்தது.