ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சிக்கான 13ஆவது ‘ஏரோ இந்தியா-21’ விமான கண்காட்சி, கர்நாடகா மாநிலம் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக விதான சவுதாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “இதுவரை நடைபெற்ற ஏரோ இந்தியா நிகழ்வுகளுக்கு பெரும் சாட்சியாக பெங்களூரு இருந்துள்ளது. ஏரோ இந்தியாவை நடத்துவதில் பெங்களூரு நிறைய அனுபவங்களைக் கண்டுள்ளது.
கோவிட் -19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் இம்முறை நடைபெறவிருக்கும் 13ஆவது ‘ஏரோ இந்தியா-21’ விமான கண்காட்சி வெற்றிகரமான நிகழ்வாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விண்வெளி, பாதுகாப்பு உற்பத்தி துறையில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அந்த இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தும்” என்றார்.