தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்த மகளை உயிர்ப்பிக்க முயற்சித்த பெற்றோர் - உத்தரபிரதேசத்தில் வினோத சம்பவம் - உத்தரபிரதேசத்தில் வினோத சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18 வயது மகளின் இறந்த உடலை மீண்டும் உயிர்ப்பிக்க ‘பிளாக் மேஜிக்’ செய்ய மூன்று நாட்கள் வீட்டில் பூட்டி வைத்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.

இறந்த மகளை உயிர்ப்பிக்க முயற்சித்த பெற்றோர் - உத்தரபிரதேசத்தில் வினோத சம்பவம்
இறந்த மகளை உயிர்ப்பிக்க முயற்சித்த பெற்றோர் - உத்தரபிரதேசத்தில் வினோத சம்பவம்

By

Published : Jun 30, 2022, 7:53 AM IST

உத்தரப்பிரதேசம்(பிராயாக்ராஜ்): உத்தரப்பிரதேச மாநிலம் கர்ச்சனா மாவட்டம் தீஹா கிராமத்தில் 18 வயது மகளின் இறந்த சடலத்தை பெற்றோர் வீட்டில் பூட்டி வைத்துள்ளனர். அப்பகுதியில் திடீரென வீசிய துர்நாற்றத்தால் கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மெளத்கர்ச்சனா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் 18 வயதுடைய தீபிகா யாதவ் சில தினங்களுக்கு முன் சந்தேக முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இறந்த மகளுக்கு எந்த ஒரு இறுதி சடங்கும் செய்யாமல் வீட்டில் வைத்து தந்திர மந்திரம் என்னும் ப்ளாக் மேஜிக் மூலம் மகளின் உயிரை திரும்ப கொண்டு வர பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

விசாரணை

இதற்காக கங்கா நதியின் நீர் மற்றும் சில சூனியத்திற்கு தேவையான பொருட்கள் என பலவற்றை உபயோகித்துள்ளனர். இதனால் அக்குடும்பத்தில் இருக்கும் 11 பேருக்கு உடல் நிலை மோசாமாகியுள்ளது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடல்நிலைக் குன்றியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணையில் மகளின் திடீர் இழப்பை தாங்காமல், பெற்றோர் மன சோர்வில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:விவாகரத்து தர மறுத்த மனைவியின் குடும்பத்திற்கு தீ வைத்த கணவன் - இருவர் பலி

ABOUT THE AUTHOR

...view details