பாட்னா:பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் செயல்பட்டவர். அக்கட்சியின் துணை தலைவராகவும் பணியாற்றினார். இருப்பினும் சில காரணங்களால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தனியாக கட்சித் தொடங்கும் முடிவிலும் இருந்து வந்தார். இவரது சிறந்த அரசியல் வியூகம் பல மாநிலங்களின் வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றதற்கு முக்கிய காரணம் பிரசாந்த் கிஷோர் என்று செய்திகள் உள்ளன.
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் அவரது அடுத்த வியூகத்தை தொடங்கியுள்ளார். தேர்தல் வியூக அறிவுரைகளை சிறிது காலத்திற்கு ஒத்தி வைத்து விட்டு, பிகார் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அந்த வகையில் பிகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் இருந்து இன்று (அக்-2) முதல் நடைப்பயணத்தை தொடங்கினார்.
ஜன் சூரஜ் அபியான் யாத்திரை:இந்த 3,500 கி.மீ நடைபயணம் பல மாதங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பிகார் மாநிலத்தின் பல நகரங்கள், கிராமங்கள் என்று அனைத்து முக்கிய இடங்களுக்கும் சென்று மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உள்ளார் கிஷோர்.
யாத்திரையின் மூன்று நோக்கங்கள்: