தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேசிஆர் அடுத்த மூவ்; எம்.பி., ஆகிறார் பிரகாஷ் ராஜ்? - நடிகர் பிரகாஷ் ராஜூக்கு தெலுங்கானா எம்பி சீட்

தெலங்கானாவில் காலியாகவுள்ள மாநிலங்களவை எம்பி பதவிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு  எம்பி சீட்?
நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எம்பி சீட்?

By

Published : May 14, 2022, 2:59 PM IST

ஹைதராபாத்:இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடக்கஉள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடத்திற்கான தேர்வில் நடிகர் பிரகாஷ் ராஜ், எம்பி பதவிக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், மாநில முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ்-ஐ சில நாள்களுக்கு முன், அவருடைய பண்ணை வீட்டில் சந்தித்தார்.

அப்போது, முதலமைச்சரின் வீட்டில் அவரை சந்தித்த பிரகாஷ் ராஜ் எம்பி சீட் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் மொத்தமுள்ள 7 மாநிலங்களவை எம்.பி. பதவிகளும் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிடம் உள்ளன.

மீதமுள்ள இடங்களுக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ் ஆளும் மத்திய அரசான பிஜேபிக்கு எதிராக பல இடங்களில் பேசியதால் தெலுங்கானா முதலமைச்சருக்கு இந்த யோசனை வந்துள்ளதாகவும், ஒரு சிறந்த நடிகர் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இது குறித்து அந்தக் கட்சி சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு - திமுக, அதிமுக கடும் போட்டி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details