'பாகுபலி' பிரபாஸ் நடித்துள்ள அதிரடி சாகசப்படமான "சலார்" செப்டம்பர் 28, 2023அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு இன்று (ஆகஸ்ட் 15)அறிவித்துள்ளது. "கேஜிஎஃப்" படப்புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.
தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் சுதந்திர தினத்தை முன்னிட்டு, படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பிரபாஸின் புதிய போஸ்டரை வெளியிட்டது. இப்படம் இந்தியா முழுவதிலும் வெளியாக உள்ளது. சலார் படத்திற்கான காட்சிகள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது. மேலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இது பான் இந்தியா திரைப்படமாக மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.