ஹைதராபாத்: ராமாயணம் இதிகாசத்தை தழுவி ஓம் ராத் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், கிரிதி சனோன், சயிஃப் அலி கான் ஆகியோர் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.
இன்று பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். பிரபாஸ் ரசிகர்கள் தியேட்டர்களில் கட் அவுட்கள் வைத்து மலர் தூவி, வெடி வெடித்து, பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். மேலும் சமூக வலைதளமான ட்விட்டரில் பிரபாஸ் ரசிகர்கள் தெலுங்கானா, ஆந்திர மாநில தியேட்டர்களில் கொண்டாட்டங்களை ரசிகர்கள் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படத்திற்கு டிக்கெட் எடுக்க தியேட்டர்களில் ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். ஆதிபுருஷ் திரைப்படம் இந்தியாவிலேயே மிகப்பெரும் பொருட்செலவில் 500 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் இந்த வாரம் தியேட்டர்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஆதிபுருஷ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளிலும், அதில் இந்தியாவில் மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரபல தியேட்டர் நிறுவனமான பிவிஆரின் சிஇஓ கௌதம் தட்டா ”ஆதிபுருஷ் படம் வெளியாகி முதல் வாரத்தில் 200 கோடி வரை வசூலை எட்டும்” என கூறினார். மேலும் இத்திரைப்படத்தை கான பள்ளி மாணவர்கள், அரசியல்வாதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறினார். பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாள் வசூலில் 50 கோடியை தாண்டும் என கூறுகின்றனர். சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆதிபுருஷ் திரைப்படம் மோஷன் கேப்ச்சர் என்ற புதிய வகை தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொழில்நுட்பம் மூலம் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான கோச்சடையான் திரைப்படம் உருவானது. ஆதிபுருஷ் திரப்படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான போது அதனுடைய தரத்தை ரசிகர்கள் கேலி செய்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனால் படக்குழு படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக படத்தின் வெளியீட்டு தேதியை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: Baba black Sheep: இசை வெளியீட்டு விழாவில் முன்னணி திரைப்பிரபலங்கள் அளித்த நெகிழ்ச்சி சம்பவம்