மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் (மே.2) தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அப்போது கூச்பெஹர் மாவட்டத்தின் சிதில்குச்சியில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் வன்முறை வெடித்துள்ளது. இதில் பாஜக கட்சியை சேர்ந்த மானிக் மைத்ரா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க சிதில்குச்சி தொகுதியில் கலவரம் - பாஜக உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு! - today Tamil news
சிதல்குச்சி: கூச்பெஹர் மாவட்டத்தின் சிதில்குச்சி தொகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் பாஜக கட்சியினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
![மேற்கு வங்க சிதில்குச்சி தொகுதியில் கலவரம் - பாஜக உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு! சிதல்குச்சி தொகுதியில் கலவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11625009-158-11625009-1620035752039.jpg)
சிதல்குச்சி தொகுதியில் கலவரம்
சிதில்குச்சியில் பாஜக வேட்பாளர் பரேன்சந்திர பர்மன் வெற்றி பெற்றார். அப்போது வெளிவந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், பாஜக ஆதரவாளர்களை தாக்கினார்கள். மேலும் இந்த வன்முறையில் குறைந்தது 35 பாஜக ஆதரவாளர்கள் காயமடைந்துள்ளனர் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழப்பு: மருத்துவர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு!