டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இரண்டு லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நாளை ஒப்பிடுகையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.
14 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில் கரோனாவால் 573 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 22 லட்சத்து 24 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 76 லட்சத்து 77 ஆயிரத்து 328 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 163.84 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் நேற்று (ஜன 26) மட்டும் 22 லட்சத்து 35 ஆயிரத்து 267 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.