நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா வெப் சீரிஸ் ஒன்றுக்காக ஆபாச படங்களை பதிவு செய்து அதை இணையத்தில் பதிவேற்றியதாக அவர் மீது கடந்த ஆண்டு நடிகை ஷெர்லின் சோப்ரா புகார் அளித்திருந்தார்.
இந்த சூழலில் தனக்கு முன் பிணை வழங்கக்கோரி ராஜ் குந்த்ரா மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வெப் சீரிஸூக்கும் தனது நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.