நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை காவல் துறையினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய செல்போனை ஆய்வுசெய்ததில், ஆபாச படம் விற்பனை செய்ததற்கான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.