மும்பை : ஆபாச பட தயாரிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தாரா அவரின் நிறுவனத்தில் தலைமை ஐடி அலுவலராக பணிபுரியும் ரியான் தோர்போ ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இந்த ஜாமின் மனு ஏஎஸ் கட்கரி அடங்கிய ஒற்றை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நிராகரித்த நீதிபதி, ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.