தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் - ஆளுநர் உரை

புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது என புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில சபாநாயகர் செல்வம்
புதுவை மாநில சபாநாயகர் செல்வம்

By

Published : Aug 14, 2021, 2:20 AM IST

புதுச்சேரி:சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 26ஆம் தேதி, துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அன்று மாலை துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

இந்த முறை சட்டப்பேரவையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். செப்டம்பர் 9ஆம் தேதி புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று, பிரதமர், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்களை சந்திக்க உள்ளார்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details