புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள பதிவில், "புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் மக்களுக்கு எந்தவிதப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
அரசியல் ரீதியாக என். ஆர். காங்கிரஸ் பாரதிய ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. அலங்கோலமான ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார். எது நடந்தாலும் பரவாயில்லை, தனது முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள அவர் பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளார்.