புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியின் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் ராஜாராம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி, இன்று அவர் உயிரிழந்தார்.
இவர் 1991-ஆம் ஆண்டு மண்ணாடிப்பட்டு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ கரோனாவால் உயிரிழப்பு - ex mla died due to corona
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டபேரவை உறுப்பினர் ராஜாராம் கரோனாவால் இன்று உயிரிழந்தார்.
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ கரோனாவால் உயிரிழப்பு