சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2015ஆம் ஆண்டுமுதல் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளன. தற்போது தற்காலிகமாக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதால் இந்தப் பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனப் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பொறுப்புப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளவரை பதிவாளராக நியமிக்கும் வகையில் நியமனங்கள் நிரப்பப்படாமல் தாமதப்படுத்துவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.