இதுதொடர்பாக புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " க்யூ எஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசையானது, பல்கலைக்கழகத்தின் பல முக்கிய பணிகள், அதாவது கல்வியாண்டு தேர்ச்சி விகிதம், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை, ஆசிரியர்-மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள்- மாணவர்கள் விகிதம் போன்ற ஆறு கடுமையான செயல்திறன் குறிகாட்டிகளுடன் தரவரிசை பட்டியல், 2022 சமீபத்தில் வெளியிட்டது.
இதில், புதுச்சேரி பல்கலைக்கழகம் 801 முதல் 1000 வகையினங்களுக்கு இடையில், தர வரிசைப் பெற்ற உலகின் முதல் 1,000 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளது.
க்யூ எஸ் உலகப் பல்கலைக்கழக இடையிலான தரவரிசையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் இடம் பெற்று வரலாற்று சாதனை பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் 2022 இல் 22 பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மட்டுமே இந்திய அளவில் இடம்பெற முடிந்தது.
இதில் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆராய்ச்சி, கற்பித்தல், அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரை போன்ற செயல்திறன் குறிகாட்டிகளில், மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை பெற்றுள்ளது.