தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியிலிருந்து ஆந்திராவுக்குத் தாவும் மல்லாடி கிருஷ்ணா ராவ்!

புதுச்சேரி மாநில அரசியலிலிருந்து, 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடைபெறவுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அறிவித்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியுள்ளது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pondicherry tourism minister malladi krishna rao plans to quit
pondicherry tourism minister malladi krishna rao plans to quit

By

Published : Dec 18, 2020, 7:11 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி அரசியலிலிருந்து ஜனவரி மாதத்திலிருந்து விடைபெறப் போவதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஒ.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான நிகழ்வு விஜயவாடா நகரில் நடந்தது. அதில் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அதில், “ஆந்திராவில் ஜெகன் தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. இவரது மக்கள் நலத் திட்டங்கள் புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்சூழலில், எனக்கு மூன்றாவது முறையாகச் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கான விருது ஏனாமில், புதுச்சேரி அரசு சார்பில் அளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான முதல் பத்திரிகையை ஜெகனுக்கு வழங்க ஆசைப்படுகிறேன். மேலும், அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி எனது புதுச்சேரி மாநில அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணுகிறேன்” என்று அவர் பேசியுள்ளார். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details