தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா அதிகமானால் பகுதி நேர ஊரடங்கு - தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: கரோனா தொற்று பரவல் அதிகமானால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

By

Published : Apr 16, 2021, 6:09 PM IST

Pondicherry Deputy Governor Tamilisai Soundararajan
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரேனா இரண்டாவது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புதுச்சேரியில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 33 ஆயிரத்து 904 பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில், படுக்கை வசதி, வென்டிலேட்டர் வசதி, மருத்துவ குழுவினர் உள்ளடக்கிய நடமாடும் தடுப்பூசி வாகனம் தொடக்க விழா இன்று(ஏப்.16) நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

"நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு தடுப்பூசி வாகனங்களை அனுப்பி கரோனா தடுப்பூசி போடப்படும். இது நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மிக முக்கியம் . பல இடங்களில் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தி இருந்தாலும்,மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் கரோனா பரவல் அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். .

தற்போது வரை முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. அனைவரும் முகக் கவசம் அணிந்து நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்"என்று கூறினார்.

இதையும் படிங்க: கரோனா: வழக்கு விசாரணைகள் இனி ஆன்லைனில் மட்டுமே!

ABOUT THE AUTHOR

...view details