புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நேற்று (மே.09) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருமி நாசினி தெளித்து சுத்திகரிக்கப்பட்ட முதலமைச்சர் அலுவலகம் - Pondicherry CM Rangasami
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையிலுள்ள அவரது அலுவலகம் கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட்டது.
Pondicherry CM Rangasami affected by corona
இந்நிலையில் சட்டப்பேரவையிலுள்ள அவரது அலுவலகம் இன்று (மே.10) கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட்டது. முன்னதாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு முதலமைச்சர் ரங்கசாமி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.