புதுச்சேரி: ரங்கசாமி இன்று (நவ. 12) அவரது அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த கனமழையின் காரணமாக புதுச்சேரியிலுள்ள 84 ஏரிகளில் 54 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள ஏரிகள் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளன.
புதுச்சேரியில் சராசரியாக 130 செ.மீ. மழை பெய்யும்; இந்தாண்டு மொத்தமாக 184 செ.மீ. மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மழையினால் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.