தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் தொடங்கியது ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு - wb election

மேற்கு வங்கம் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலின் ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

West Bengal
மேற்கு வங்கம்

By

Published : Apr 17, 2021, 8:11 AM IST

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 45 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஏற்கனவே, நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட்டதால், இம்முறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 6 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்கள், சென்னை வேளச்சேரி தொகுதியில் 92ஆவது வார்டில் மறுவாக்குப்பதிவும் தற்போது தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:மேற்கு வங்கம் ஐந்தாம் கட்டத் தேர்தல்

ABOUT THE AUTHOR

...view details