தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Delhi Corporation Election: கடும் குளிரிலும் விறுவிறு வாக்குப்பதிவு! - ஆம் ஆத்மி

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

Delhi Corporation Election: கடும் குளிரிலும் விறுவிறு வாக்குப்பதிவு!
Delhi Corporation Election: கடும் குளிரிலும் விறுவிறு வாக்குப்பதிவு!

By

Published : Dec 4, 2022, 10:16 AM IST

டெல்லி: தலைநகர் டெல்லி மாநகராட்சி தேர்தல் இன்று(டிச.4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரசாரம் டிசம்பர் 2-ம் தேதி ஓய்ந்தது. கடந்த தேர்தலில் பாஜக மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது.

டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர். முதல்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் வாக்களித்தனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் செளத்ரி, பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 7-ம் தேதி புதன்கிழமை எண்ணப்படவுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிவரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:கைதிகளை அடிக்காமல் விசாரணை.. அமெரிக்கா பாணியில் கொல்கத்தா போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details