தமிழ்நாடு

tamil nadu

மேற்கு வங்கத்தில் வன்முறை: நான்கு பேர் சுட்டுக்கொலை

By

Published : Apr 10, 2021, 12:10 PM IST

Updated : Apr 10, 2021, 12:28 PM IST

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் சிதால்குச்சி வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராக நிகழ்ந்த வன்முறையில், மத்திய பாதுகாப்புப் படையினரால் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Poll violence
கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்ரல் 10) நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், கூச் பெஹார் மாவட்டத்தில் சிதால்குச்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இளைஞரை, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் பாஜக இருப்பதாக, திருணமூல் கட்சியினர் குற்றஞ்சாட்ட தொடங்கினர். இதில், இரு கட்சியினரிடையே மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே குண்டு வீசப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதில், நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், வாக்குச்சாவடி அருகே பதற்றமான நிலைமை நிலவிவருகிறது. காவல் துறையினரும், சிஆர்பிஎஃப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாஜக வேட்பாளர் லாக்கெட் சட்டர்ஜி என்பவரின் காரும் வன்முறையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அங்கிருந்த ஊடகங்களின் வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த வன்முறைச் சம்பவம் குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

இதையும் படிங்க:லடாக் விவகாரம்: 13 மணி நேரம் நீடித்த 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை

Last Updated : Apr 10, 2021, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details