தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையம்! - நந்திகிராம்

டெல்லி: நந்திகிராம் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Breaking News

By

Published : Apr 4, 2021, 7:34 PM IST

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. அம்மாநில முதலமைச்சர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் ஏப்ரல் 2ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மம்தாவின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "மம்தா அளித்த எழுத்துப்பூர்வமான புகாரில் உண்மை இல்லை. தகுந்த ஆதாரங்கள் இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே மம்தா தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துவருகிறார். அதுமட்டுமின்றி, காவல்துறை இயக்குநர் மாற்றப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை கேட்டு தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக மம்தா குற்றச்சாட்டு சுமத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details