தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜீவ் காந்தி 78ஆவது பிறந்தநாள்... தலைவர்கள் மரியாதை - RAJIV GANDHI

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி ட்விட்டரில் அவரை நினைவுக்கூர்ந்தார். மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ராஜீவ் காந்தி 78ஆவது பிறந்தநாள்
ராஜீவ் காந்தி 78ஆவது பிறந்தநாள்

By

Published : Aug 20, 2022, 9:37 AM IST

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78ஆவது பிறந்தநாள் இன்று (ஆக. 20) கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று காலையில் மரியாதை செலுத்தினர்.

அவர்களுடன் மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா, மாநிலங்களவை உறுப்பினர் கேசி வேணுகோபால் ஆகியோரும் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மரியாதை செலுத்த வருகை தரவில்லை.

ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அவரை நினைவுக்கூர்ந்துள்ளார். அதில்,"நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு, அவரது பிறந்தநாளில் எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் இளம் பிரதமரான ராஜீவ் காந்தி, 1984-89ஆம் ஆண்டுகளில் அப்பதவியை வகித்தார். மக்களவையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றது அதுவே கடைசியாகும். 1944ஆம் ஆண்டு பிறந்த அவர், 1991ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படையால் கொல்லப்பட்டார்.

இதையும் படிங்க:3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது... பிரதமர் மோடி...

ABOUT THE AUTHOR

...view details