தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செயலற்ற தன்மையால் முடங்கிய மத்திய அரசு - ராகுல் காந்தி - டெல்லி செய்திகள்

கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறமுடியாமல் செயலற்ற தன்மையால் மத்திய அரசு முடங்கியுள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

செயலற்ற தன்மையால் முடங்கிய மத்திய அரசு - ராகுல் காந்தி
செயலற்ற தன்மையால் முடங்கிய மத்திய அரசு - ராகுல் காந்தி

By

Published : May 4, 2021, 8:48 AM IST

டெல்லி: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், போதிய தடுப்பூசிகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசு மீது தொடர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றன. இதனிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடவே இருப்பு இல்லை என எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு புதிய ஆர்டர்களை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறமுடியாமல் செயலற்ற தன்மையால் மத்திய அரசு முடங்கியுள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டுமே தவிர பொய் செய்திகளை பரப்ப கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details