தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஆர்பிஎப் வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்! - thiruvallur news

திருவள்ளூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரோந்து பணிக்கு சென்ற காவலர் மாரடைப்பால் மரணம்!
ரோந்து பணிக்கு சென்ற காவலர் மாரடைப்பால் மரணம்!

By

Published : Jun 15, 2021, 2:29 AM IST

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் இந்திராம் எல்லையோரப் பகுதியில் சி.ஆர்.பி.எப் ஒன்றிய பாதுகாப்பு படை பிரிவில், நக்சலைட்டுகள் அதிகமுள்ள பகுதியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சத்தியசாட்சி.

சத்தியசாட்சி ஜூன்.13 அன்று ரோந்து பணிக்காக சக வீரர்களுடன் சென்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த சத்தியசாட்சியின் மனைவி கவிதா சென்னையை அடுத்த ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பணியின் போது உயிரிழந்ததால் அவரதுசொந்த ஊரான திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் உள்ள மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். சி.ஆர்.பி.எப் அலுவலர்கள் அவரது உடலில் தேசியக் கொடி போர்த்தி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: மாஸ்க் போடாதவர்களுக்கு மரண பயம் காட்டிய ஊராட்சி

ABOUT THE AUTHOR

...view details