டெல்லி: டெல்லியில் சமீபத்தில் லிவிங்டுகெதரில் இருந்த காதலி ஷ்ரத்தாவை கொன்றதற்காக அஃப்தாப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த மே மாதம் கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அஃப்தாப்பை தொடர்ந்து விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
இந்நிலையில் இன்று (நவ-18) அஃப்தாப் பணி புரிந்த குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு ஆய்வு நடத்தச் சென்றனர். அந்த அலுவலகத்தின் சுற்று வட்டாரப்பகுதியில் முட்புதர்களுக்குள்ளே சில பிளாஸ்டிக் பைகளை கண்டெடுத்தனர்.
காவல்துறையினர் கண்டெடுத்த பைகளுக்குள் என்ன இருந்தன? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் முன்னதாக அஃப்தாப்பிடம் விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள அஃப்தாப்பின் வீட்டில் மே 18 அன்று ஷ்ரத்தா(27) கொலை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து 300 லிட்டர் குளிர் சாதனப்பெட்டியில் ஒருவாரம் பதப்படுத்தி வைத்திருந்ததாகவும் அஃப்தாப் தெரிவித்துள்ளார். இதுவரை பல்வேறு இடங்களில் இருந்து ஷ்ரத்தாவின் 13 உடல் பாகங்கள் பல துண்டுகளாக கைப்பற்றபட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இனி அடுத்ததாக அஃப்தாப்பை உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசத்திற்கு அழைத்துச்செல்ல இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:படித்த பெண்கள் லிவிங் டுகெதரில் இருக்கக்கூடாது - மத்திய இணை அமைச்சர் கருத்து