பிகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்திலுள்ள கழுகார் பகுதியில் வியாபாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த காய்கறி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தி, வேறு பகுதிக்கு மாற்ற காவல்துறையினர் முயற்சித்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.
பிகார் காய்கறி சந்தையில் மோதல்; இரு காவலர்கள் படுகாயம்! - பிகாரில் இரு காவல்துறையினர் மீது தாக்குதல்
பிகாரில் காவல்துறையினருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.
![பிகார் காய்கறி சந்தையில் மோதல்; இரு காவலர்கள் படுகாயம்! Bihar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:53:13:1620465793-11683641-ju.jpg)
Bihar
அதேவேளை காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதன் காரணமாகவே தாக்குதலில் ஈடுபட்டதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரச்சனை குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.