கேரளா : இடுக்கி மாவட்டம் குதிரைலாங்குடியில் உள்ள மலை உச்சியிலிருந்து ஒரு பெண் தற்கொலை செய்ய முயன்றதை பார்த்த அப்பகுதி பொது மக்கள் உடனடியாக அடிமாலி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு சென்ற எஸ்ஐ சந்தோஷ் தலைமையிலான காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் அந்த பெண் தனது காதலனுடன் பிரச்சனை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மலை உச்சியிலிருந்த பெண்ணிடம் சுமார் இரண்டு மணிநேரம் எஸ்ஐ பேச்சு வார்த்தை நடத்தினார்.