தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யாசகருக்கு 'வடா பாவ்'வுடன் 100 கிராம் தங்க நகைகளையும் தவறுதலாக கொடுத்த பெண்: அடுத்து நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் யாசகம் பெற வந்தவரிடம் உணவு கொடுக்கும் போது பெண் ஒருவர் தவறுதலாக தன்னுடைய தங்க நகையையும் சேர்த்து கொடுத்துள்ளார். காவல்துறையில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

தங்க நகை
தங்க நகை

By

Published : Jun 16, 2022, 10:51 PM IST

மும்பை (மகாராஷ்டிரா):மகாராஷ்டிரா மாநிலம், ஆரே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி. வங்கியில் நகை அடமானம் வைப்பதற்காக 100 கிராம் தங்க நகைகளை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வழியில் பெண் ஒருவர் குழந்தையுடன் சுந்தரியிடம் யாசகம் கேட்டுள்ளார். இதையடுத்து சுந்தரி தன் பையில் வைத்திருந்த ’வடா பாவ்வை’ எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் வங்கிக்கு சென்று பார்த்தபோது பையில் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து யாசகம் கொடுக்கும் போது தவறுதலாக நகை பையையும் சேர்த்து கொடுத்ததை அறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், யாசகம் பெற்ற பெண் பையை குப்பைத்தொட்டியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து, காவல் துறையினர் நகைகளை மீட்டு சுந்தரியிடம் கொடுத்தனர்.

இதையும் படிங்க: 'சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே!' - குடிமகன்கள் வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details