தமிழ்நாடு

tamil nadu

சுருக்குமடி வலை விவகாரம்: நடுக்கடலில் நடந்த மீனவர்கள் சண்டையால் போலீஸ் துப்பாக்கிச் சூடு!

By

Published : Aug 29, 2021, 3:34 AM IST

சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கிடையே நடுக்கடலில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுருக்குமடி வலை விவகாரம்
சுருக்குமடி வலை விவகாரம்

புதுச்சேரி:சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தால் பரபரப்பு ஏற்படுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த வீராம்பட்டினம், நல்லவாடு ஆகிய இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையில் மீன்பிடிக்கும் போது சுருக்கு மடி வலை பயன்படுத்துவது தொடர்பாக பகை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், வீராம்பட்டினம் பகுதி நடுக்கடலில், நல்லவாடு மீனவர்களுக்கும் வீராம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்து புதுச்சேரி மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரியங்குப்பம், தவளக்குப்பம் காவல்நிலையக் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

மீனவர்கள் மோதலை நிறுத்தாததால் காவல்துறையினர் மோதலைக் கட்டுப்படுத்த வனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது.

இந்த கலவரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் கூறிவரும் நிலையில், நல்லவாடு கிராம மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தலாம் எனக் கூறியதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: புதுச்சேரி: காவல்துறை வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை

ABOUT THE AUTHOR

...view details