ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சாம்பூரா நகர் காவல் உதவி ஆய்வாளரின் வீடு புகுந்து பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவில் தாக்குதல் நடத்தினர்.
புல்வாமாவில் போலீஸ் சுட்டுக்கொலை - உதவி ஆய்வாளர்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல் துறை அதிகாரியை பயங்கரவாதிகள் வீடு புகுந்து சுட்டுக்கொன்றனர்.
புல்வாமாவில் போலீஸ் சுட்டுக்கொலை
அதில், உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் வீட்டின் அருகே வயலில் கண்டெடுக்கப்பட்டது. ஃபரூக், இந்திய ரிசர்வ் போலீஸ் பிரிவின் 23ஆவது பட்டாலியனை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குஜராத் தொழிலதிபர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை