தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் காவலர் சுட்டுக்கொலை; மேலும் 2 காவலர்கள் காயம் - துணை காவல் உதவி ஆய்வாளர் முஷ்டாக் அகமது

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துணை காவல் உதவியாளர் உயிரிழந்தார். மேலும், அதில் 2 காவலர்கள் காயமடைந்தனர்.

காஷ்மீரில் காவலர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் காவலர் சுட்டுக்கொலை

By

Published : Jul 13, 2022, 10:11 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மூ காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் லால் பஜார் பகுதியில் இருந்த சோதனைச்சாவடியை நோக்கி பயங்கரவாதிகள் நேற்றிரவு (ஜூலை 12) துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த தாக்குதலில், போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

முதல்கட்ட தகவலில், சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மூன்று போலீஸார் குண்டடியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. மூன்று காவலர்களில் ஒருவரான துணை காவல் உதவி ஆய்வாளர் முஷ்டாக் அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் ஒருவர் தலைமை காவலர் என்றும், மற்றொருவர் சிறப்பு காவலர் (SPO) என்றும் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காஷ்மீர் காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில்,"காவல் உதவி ஆய்வாளர் முஷ்டக் அகமது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்தார். எல்லை பாதுகாப்பு பகுதியில் அவர் ஆற்றிய உயரிய தியாகத்திற்கு தகுந்த இறுதி மரியாதை செலுத்தப்படும். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஜோத்பூரில் CRPF காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details