ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் கணபாவரம் சி.ஐ. கழுகுப் பகுதியைச் சேர்ந்தவர் டேகாலா பிரசாத் (42). காவல் ஆய்வாளராகப் பணியாற்றிவந்த இவர், தினமும் சக காவலர்களுடன் இணைந்து பேட்மிண்ட்டன் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
விளையாடிக் கொண்டிருந்தபோது காவலர் திடீர் நெஞ்சுவலியால் மரணம்! - ஆந்திரா மாநில செய்திகள்
ஆந்திரா: டேகாலா பிரசாத் என்ற காவல் ஆய்வாளர், விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென கீழே விழுந்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![விளையாடிக் கொண்டிருந்தபோது காவலர் திடீர் நெஞ்சுவலியால் மரணம்! டேகாலா பிரசாத்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11137605-915-11137605-1616572265652.jpg)
டேகாலா பிரசாத்
இந்நிலையில் நேற்று (மார்ச் 23) அவர் வழக்கம்போல் காவலர்களுடன் இணைந்து விளையாடும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் உடனே அவருக்கு முதல் உதவி செய்து, மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
காவல் ஆய்வாளர் டேகாலா பிரசாத் உயிரிழப்பு
ஆனால், பிரசாத் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரின் இந்தத் திடீர் மரணம் சக காவலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Mar 24, 2021, 6:52 PM IST