தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்ட்டில் மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது - மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

Police arrest man for raping 11-year-old daughter in Uttarakhand
Police arrest man for raping 11-year-old daughter in Uttarakhand

By

Published : Feb 13, 2023, 10:28 PM IST

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் பகுதியில் வசித்துவரும் 11 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இவரது தாயார் வெளியூர் சென்றிருந்த நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இருப்பினும், தாயார் ஊர் திரும்பியதை தொடர்ந்து, தந்தையின் கொடூர செயல் குறித்து சிறுமி அவரிடம் விளக்கி உள்ளார். இதையடுத்து அவரும் தனது கணவரிடம் கேட்டபோது, அவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அவர் ராம்நகர் போலீசாரிடம் தனது கணவர் மீது புகார் அளித்தார்.

இந்த அடிப்படையில், சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இதுபோன்ற பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் சிறுமிகள், பயப்படாமல் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும். நேரில் வர அசௌகரியம் உணர்ந்தால் செல்போன் மூலமாக கூட புகார் அளிக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:தாயின் உடலுடன் ஒரே அறையில் பல நாட்கள் தங்கியிருந்த மகள்

ABOUT THE AUTHOR

...view details