புனே:மகாராஸ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ தக்காளியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விவசாயி அருண் தோம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொழிலாளர்கள் உதவியுடன் தனது தோட்டத்தில் இருந்து தக்காளி அறுவடை செய்துள்ளார்.
இந்த தக்காளிகளை பெட்டிகளில் அடுக்கி, வாகனம் மூலம் ஷிரூர் தாலுகாவில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அடுத்தநாள் தக்காளிகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த அவருக்கு காலையில் எழுந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீட்டில் வைத்திருந்த தக்காளி பெட்டிகளில் 400 கிலோ எடையுள்ள 20 பெட்டிகள் மட்டும் திருடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருண் தோம், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இதன் மூலம் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தக்காளி திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழித்து ரூ.6ஆயிரத்தை இழந்த நபர்! நடந்தது என்ன தெரியுமா?