புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான சமையல் கூடம் உள்ளது. இந்த சமையல் கூடத்தில் நேற்று (மார்ச் 24) காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கத்தியுடன் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அந்தப் பெண்ணிடம் சமயோசிதமாக பேசி அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்க முயற்சி செய்தனர். ஆனால், கத்தியுடன் புகுந்த பெண் ‘நான் யார் என்று தெரியுமா? நான் இனிமேல் தான் என்ன பத்தி உங்களுக்கு காட்டுவேன்’ என கூச்சலிட்டார்.
சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணிடம் பேசி கத்தியை காவல் துறையிர் பிடுங்கினர். இதனையடுத்து அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் உறுவையாறை சேர்ந்த ஜான் போஸ்கோ என்பவரது மனைவி விசாலாட்சி என்பது தெரியவந்தது.
கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட பெண் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கவர்னர் மாளிகை அருகே உள்ள டீ டைம் என்ற டீக்கடையில் அவரது மகள் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. தனது மகளின் பாதுகாப்புக்கு வந்த விசாலாட்சி தன் சுய நினைவு இழந்து கத்தியுடன் ஆசிரம சமையல் கூட்டத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க:பேருந்து ஓட்டுநரை தாக்கிய பள்ளி மாணவர் கைது