தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குட்கா, ஹான்ஸ் விற்பனை: விற்பனையாளர் கைது! - pudhucheery latest news

புதுச்சேரி: குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்து, சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.

குற்றச் செய்திகள்
தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் விற்பனை-விற்பனையாளர் கைது

By

Published : Mar 20, 2021, 6:26 PM IST

புதுச்சேரியில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெயின்போ நகர் பகுதியில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரியக்கடை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின்பேரில் காவல் ஆய்வாளர்கள் கண்ணன், முத்துக்குமார் தலைமையிலான குற்றப்பிரிவு காவல் துறையினர், சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள நோட்டுப் புத்தகக் கடையில் சோதனையிட்டனர்.

அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பறிமுதல்செய்து, மகேந்திரன் என்பவரைக் கைதுசெய்தனர்.

இது குறித்து அவரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின்படி, வள்ளலார் வீதியில் உள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

மேலும் இதில் முக்கியக் குற்றவாளிகள் யார் எனத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. கைதுசெய்யப்பட்ட மகேந்திரன் 2017ஆம் ஆண்டு, இதே வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒருதலை காதலால்..எட்டு மாத குழந்தை வெட்டிக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details