கம்மம்: தெலங்கானாவில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபருக்கு லிஃப்ட் கொடுத்த ஜமால் என்பவர், விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வழக்கில் பல திடுக்கிடும் தகவல்களைப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிந்தகனி மண்டலத்தைச் சேர்ந்த மூன்று பேர் முன் கூட்டியே திட்டமிட்டு, ஜமாலை கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊசி வழியாக அதிகளவு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்துள்ளதாகவும், இதில் மருத்துவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதில் சம்மந்தப்பட்ட மூவரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைத்தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.