தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்ப்பூரில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி உள்பட மூன்று பேர் கைது

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இன்று இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்த சிறுமி உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மைனர் சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் கைது
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மைனர் சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் கைது

By

Published : Jul 29, 2023, 12:12 PM IST

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமியை காவல் துறையினர் விசாரணைக்காக நேற்று (ஜூலை 28) கைது செய்து உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமதோபூரில் உள்ள புவா (தாய்வழி அத்தை) வீட்டில், அந்த 16 வயது சிறுமி தங்கி இருந்து உள்ளார். பாகிஸ்தானுக்கு திரும்ப திட்டமிட்டு, அதற்கான டிக்கெட்டை பதிவு செய்ய விமான நிலைய முன்பதிவு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். சிறுமி உடன் மற்ற இரண்டு நபர்களும் விமான நிலையம் சென்று இருந்தனர். அவர்கள், பாகிஸ்தான் நாட்டிற்கு செல்வதற்கான விமான டிக்கெட் ஏற்பாடு செய்து தந்து உள்ளனர்.

பாகிஸ்தான் செல்வதற்கான விமான டிக்கெட் வாங்குவதற்கான விசா அல்லது பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் ஆவணங்கள் எதையும் சிறுமி, தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் எப்படி இந்தியா வந்தீர்கள் என்று ஜெய்ப்பூர் விமான நிலைய காவல் துறையினர் அவரிடம் கேட்டபோது, அவளால் உரிய பதிலை அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக, காவல் துறையினர் அந்த சிறுமியையும், அவருடன் இருந்த அந்த 2 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து விமான நிலைய காவல் அதிகாரி திக்பால் சிங் கூறியதாவது, “ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு பாகிஸ்தான் சிறுமி ஒருவருடன் இரண்டு பேர் நேற்று (ஜூலை 28) வந்து உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததை அடுத்து, அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், அந்த சிறுமி பாகிஸ்தான் மொழியில் பேசிக் கொண்டு இருந்தார். மேலும் விசாரணையில், பாகிஸ்தானுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஆவணம் அல்லது பாஸ்போர்ட் எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பது தெரிய வந்தது. சிறுமி, மற்ற இருவர் உடன் தங்கி இருப்பதாக அவர்கள் கூறினர்.

ஸ்ரீமதோபூரில் உள்ள தனது அத்தையுடன், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். இப்போது, அவர் அத்தையுடன் தகராறு செய்து வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்து உள்ளது” என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரத்தில் ‘மியான்மர்’.. உண்மை நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details